தாமதிக்கப்படும் நீதி அநீதி!
கடும் நிபந்தனைகள் எதுவுமே இல்லாமல் இரு வருட அவகாசம் : இலங்கைக்கு வழங்குகிறது ஐ.நா.
கடும் நிபந்தனைகள் எதுவுமே இல்லாமல் இரு வருட அவகாசம் : இலங்கைக்கு வழங்குகிறது ஐ.நா.
கால அட்டவணை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலு வலகம் இலங்கையில் அமைத் தல் உள்ளிட்ட கடும் நிபந்தனை கள் இல்லாமல், 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவ தற்கு இரண்டு வருட கால அவ காசம் வழங்கி, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான இறுதித் தீர்மானம் நேற்றுக் காலை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா, வட அயர்லாந்து, பிரிட்டன், மசிடோனியா, மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் தீர்மானத்தை ஜெனிவா நேரம் நேற்றுக் காலை 10.20 மணிக்குச் சமர்ப்பித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.
கடந்த 3ஆம் திகதி இலங்கை தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரில் முன்வைக் கப்படவுள்ள தீர்மானத்தின் வரைவு வெளியாகியிருந்தது. இதன் பின்னர் 7ஆம் திகதி வரைவு தொடர்பில் முறைசாரக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை இலங்கை நிறைவேற்றுவதற்குக் கால அட்டவணை தேவை என்று சுவிற்சர்லாந்து வலியுறுத்தியிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன், இலங்கையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கடும் கண்காணிப்புத் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. மேற்படி விடயங்கள் தீர்மானத்தில் உள்ளீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்வைக்கப்பட்ட வரைவில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல், அதனையே மீளவும் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஐ.நா. மனித உரிமை கள் சபையில் நேற்றுச் சமர்ப்பித்துள்ளன.
நடப்புக் கூட்டத் தொடரில் தீர்மானங்கள் சமர்ப்பிப்பதற்கு இறுதி நாள் நாளை மறுதினம் 16 ஆம் திகதியாகும். அதற்கு முன்னராகவே, இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும். போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சித்த போதும், அந்த வாசகம் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment