Wednesday, 15 February 2017

கேப்பாப்பிலவு ENB சுவரொட்டி





காணி உரிமை போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்கள் ஆதரவு

12 பிப்ரவரி 2017

இலங்கையின் வடக்கே தங்களின் காணி உரிமைக்கான போராட்டத்தில் இரு வாரங்களாக தொடர்ந்து ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாதமிழர்கள்ஞாயிற்றுக்கிழமை
ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாண தமிழர்கள் ஆர்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணி உரிமையை வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

காணி உரிமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாபுலவு மக்களின் காணியை மீட்பது தொடர்பாக அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படை முகாம் அமைந்துள்ள தங்கள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென கோரி காணி உரிமையாளர்கள் விமானப் படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

84 குடும்பங்களுக்கு சொந்தமான இக்காணிகள் கடந்த 31ம் தேதி விடுவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது ஏமாற்றமாகிவிட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உரிமை கோரும் காணி, வன இலாகாவிற்குரியது என இலங்கை விமானப்படை கூறுகின்றது,
 

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...