SHARE

Sunday, December 04, 2016

வங்கி வரிசையில் வாழ்விழந்தார் வாழ்க்கைக் கிராமவாசி!


கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்கு வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கபிஸ்தலத்தை அடுத்த வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சுப்பிரமணியன்.

இவர் தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்காக மனைவியுடன் அங்குள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு நடுவே அவரும், அவரது மனைவியும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வரிசையில் கால்கடுக்க நின்ற முதியவர் சுப்பிரமணியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் நின்ற அவரது மனைவி தையல்நாயகி, கணவரை தன் மடியில் வைத்துக் கொண்டு உதவி கேட்டுள்ளார்.

ஆனால், முதியவரின் உயிரை பொருட்படுத்தாமல் வங்கியில் நின்ற பொதுமக்கள் பணம் எடுப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்.
 
மேலும் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனரே தவிர உதவிக்கு யாரும் முன்வரவில்லை.

நீண்ட நேரத்திற்கு பிறகு வங்கி ஊழியர்கள் அழைத்த பிறகு அங்கு வந்த `108 மருத்துவக் குழுவினர்`, முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

வங்கிக்கு பணம் எடுக்க வந்த இடத்தில் மனைவியின் மடியில் முதியவர் உயிர்விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பதிவு செய்த நாள் : December 04, 2016 - 09:07 AM

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...