போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
இலங்கையில், இறுதி கட்டப் போரின் போது, இசைப்பிரியா என்பவரை, ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த செய்தி வெளியானது. இவர், இலங்கை, 'டிவி'யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து, போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை, கணேசன் என்பவர் இயக்கினார். இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க, 'சென்சார் போர்டு' மறுத்து விட்டது. இதை எதிர்த்து, திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிடப்பட்டது;தீர்ப்பாயமும் அதை நிராகரித்தது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பாளர், இயக்குனர், மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய, இலங்கை ராணுவத்தினரை, படத்தில் விமர்சித்துள்ளனர்; தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை நியாயப்படுத்தி உள்ளனர். மேலும், இசைப்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தை சித்தரித்துள்ளனர்; வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. இலங்கை ராணுவத்தை பற்றி, அவதுாறாக காட்டியுள்ளனர். அதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும். எனவே, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்து, சென்சார் போர்டு எடுத்த முடிவு சரியானது; அதை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிலும் குறுக்கிட முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி கோரியபடி, இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
'திரைப்படத்தை வெளியிட்டால், எங்கள் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படும்; எனவே, படத்தை வெளியிடக் கூடாது' என, இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி மற்றும் சகோதரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய, இலங்கை ராணுவத்தினரை, படத்தில் விமர்சித்துள்ளனர்; தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை நியாயப்படுத்தி உள்ளனர். மேலும், இசைப்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தை சித்தரித்துள்ளனர்; வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. இலங்கை ராணுவத்தை பற்றி, அவதுாறாக காட்டியுள்ளனர். அதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும். எனவே, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்து, சென்சார் போர்டு எடுத்த முடிவு சரியானது; அதை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிலும் குறுக்கிட முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி கோரியபடி, இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இயக்குனர் கு.கணேசன் கனேடிய வானொலிக்கு அளித்த பேட்டி
`போர்க்களத்தில் ஒரு பூ`
கர்நாடக தமிழ் இயக்குனர் கு.கணேசன் கனேடிய வானொலிக்கு அளித்த பேட்டி
இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி ஆகிய இரத்த உறவினரின் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில், அவர்கள் ஆரம்பத்தில் தன் முயற்சியை ஆதரித்த தாகவும் ஆறு வயது முதலான புகைப்படங்களை தனக்கு கையளித்ததாகவும், படம் தயாரிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் தான் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்ததாகவும் மேற்கண்ட பேட்டியில் இயக்குனர் கு.கணேசன் அவர்கள் தனது நிலையை பதிவு செய்துள்ளார்.
=================================
Editorial
இசைப்பிரியா உள்ளிட்ட எண்ணற்ற மக்கள், போரிடும் உலகத்தின் பொதுப் பொக்கிசம் ஆகி விட்டவர்கள். இவர்கள் மீது இரத்த உரித்துள்ளவர்களுக்கு உள்ள உரிமை, அக்கறை போராளிகளின் பொது வாழ்வின் குறிக்கோளுக்கு கீழ்ப்பட்டதாகவே இருக்க முடியும், இருக்கவேண்டும்.
இந்த மானுடர்களுக்கு போர் வாழ்வில் எதிரி அளித்த பரிசு மானுட தர்மத்தின் மீறுதலுக்கு சாட்சியமாக இருக்கின்றதென்றால், அது எதிரியைத்தான் காறி உமிழ்கின்றது, அதற்கு பலியானவர்களை அல்ல!
இந்த சாட்சியங்கள் வரலாற்றில் கண்ணியமாகப் பதிவு செய்யப்படவேண்டும். இது சார்ந்த கலைகள் பெருக வேண்டும்! களைகள் அகல வேண்டும்! தளைகள் தகர வேண்டும்!
புதிய ஈழப் புரட்சியாள்ரர்கள்
===================================================================
Madras HC Says NO To Porkalathil Oru Poo’s Release For Portraying Sri Lankan War Crimes
By: Ashok KM | October 8, 2016
The Madras High Court has upheld an order of the Film Certification Appellate Tribunal (FCAT), which had refused to grant certification to a feature film in Tamil directed by K.Ganeshan, titled Porkalathil Oru Poo, portraying the life of a journalist named Isai Priya in Sri Lanka.
By allowing a temporary injunction application preferred by the relatives of Isai Priya, Justice TS Sivagnanam also restrained the director and producer of the film from releasing the film.
The Central Board of Film Certification (CBFC) orders refusing certification of the film was upheld by the FCAT observing that the film criticises India and the Sri Lankan Army and justifies Tamil Eelam by the LTTE, a banned outfit; the film portrays the brutal gangrape and killing of LTTE journalist Isai Priya and it contains too much of violence; the film is based on incidents in the life of a LTTE journalist; the map shows a separated Tamil Eelam by the LTTE and the last two reels deal with the brutal inhuman killing and rape.
Upholding the FCAT order, the court said the picture cannot be certified if it lowers the moral standards of those who see it or if it creates in the mind of the audience sympathy towards crime, towards wrongdoing or evil.
“That apart, due regard should be had to the standards of the country and the people to which the story relates, and it shall not be so portrayed so as to deprave the morality of the audience. The prevailing laws shall not be ridiculed as to create sympathy for violation of such laws,” the court observed.
The court also observed that multiple tiers of authorities who viewed the film and heard the petitioner, had recorded a definite conclusion that in the film, there were derogatory references against the Sri Lankan Army and the Army men were depicted in poor light, which would strain the relationship between the two countries.
The film deals with the sensitive issue of bifurcation of Sri Lanka in two parts and the film having been judged from the point of view of its overall impact and the period depicted and the contemporary standards of a country and the people to which the film relates held that it is not fit for public viewing, the court added.
The interim injunction, as prayed for by the sister and mother of Isai Priya, was also granted by the court on the ground that the film is not a feature film (documentary), but a commercial venture with the sole object of making money with no personal research done by the petitioner, but purely said to have been motivated by watching a TV channel and the movie infringes the privacy of the plaintiffs, the family members of Isai Priya and their descendants
போர்க்களப்பூப் பாடல்கள்
No comments:
Post a Comment