Sunday 23 October 2016

யாழில் சிங்களப் பொலிஸ் சுட்டு இரு ஈழ மாணவர் படுகொலை!

 
யாழ் - கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகாமையில் நேற்று இரவு இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துப்பாக்கி சூட்டினாலேயே இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




யாழ் - கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகாமையில் நேற்று இரவு இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துப்பாக்கி சூட்டினாலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.
பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களான  கந்தரோடை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்ன்,  (24)இ 155 ஆம் கட்டை கிளி நொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் ( 23 ) மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதாலேயே இந்த உயிரிழப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்தநிலையில் இன்றுமாலை யாழ்.போதனா வைத்தியசாலையில பிரேதப்பரிசோதனை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பெருமளவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடியதால் பதற்றமான சூழல்
நிலவியது.வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தனர்.

குறித்த மாணவர்களின்; பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மற்றய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களையும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இருவரையும் அழைத்த யாழ். பிரதான நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரன் பிரேத பரிசோதனையின் போது ஒருவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாக தெரிவித்ததுடன் இது ஒரு கொலை என கூறியுள்ளார்.



அத்துடன் இந்த கொலை தொடர்பில் புலன்விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்த நீதவான் மாணவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆத்திரப்பட்டு செயற்பட்டால் குழப்பம் விளைவிக்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பு க்கள் இதனை தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்திக்கொள்வர் என்றும் நீதவான் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை
பார்வையிட்டனர்.அத்துடன் மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படை ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சேவையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இதேவேளை யாழ். நகர பிரதான பொலிஸ் நிலையத்தைச் சூழ பாதுகாப்பும் பன்மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கலகத் தடுப்புப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுஇ யாழ். பொலிஸ் நிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...