Monday 26 September 2016

எழுக தமிழ்ப் பேரவைக்கு ஏகப்பட்ட ஆதரவு: இந்து மக்கள் கட்சி இந்தியா


ஈழத்தின் சிவ(ன்) பூமியை, புத்த பூமியாக மாற்றும் இலங்கை அரசின் முயற் சிக்கு எதிராக  அனைத்து உலக இந்துக்களே, ஓரணியில் திரள்வீர். 

இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இராம. ரவிக்குமார்  அழைப்பு


சிவ பூமியான இலங்கையில் யுத்த நிகழ்வுக்கு பின்னர், இந்து இன அழிப்பை தொடர்ந்து இந்து கோவில்கள், வழிபாட்டு இடங்கள், அடக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட அனைத்து இந்து மத சுவடு களை முற்றாய் அழித்து ‘சிவ” லங்காவை, ‘புத்த” லங்காவாக மாற்ற ஆளும் சிறிசேனா அரசு முயற்சியை தொடங்கியுள்ளது.

தமிழர் தாயகத்தில் – இலங்கையில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்த கோரியும் தமிழ் தேசம் தனித்துவமான இறையாண்மை, சுயநிர்யண உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை வழியுறுத்தியும், யுத்த குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரனை வலியுறுத்தியும் செப்ரெம்பர் 24, 2016 அன்று யாழ்பாணம் நகரில் கூடும் ”எழுக தமிழ்” பேரணியிலே தாயகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் ஏனைய சகோதரத்துவ மதத்தவர்களும் ஓரணியில் திரண்டு

இலங்கை அரசின் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு 

உங்கள் அனைவரையும் இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின்  சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்

தாயகத்திலே பௌத்தமயமாக்கலைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவாக இந்துக்களின் நிலங்களையும் ஆலயங்களையும் பாதுகாக்கும் நோக்கோடு எழுக தமிழ் அறப்போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி தனது  முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த மாதம் இலங்கையில் அழிக்கப்படும் இந்து கோவில்கள், இந்து அடையாளங்களை காண கள ஆய்வு மேற்க்கொண்டேன். 

எங்களவன் கட்டிய திருக்கோவில்கள் எல்லாம் சிங்களவர்களால் பௌத்த விகாரைகளாகவும், புத்த பீடங்களாகவும் மாற்றப்படுவது கண்டு இரத்த கண்ணீர் வடித்தேன்.

நாவற்குழி முருங்கண், வவூணியா, திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம், கொக்கிளாய், இரணிமடுவு, கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோவில் 3வது திருவீதியை ஆக்கிரமித்து புத்த விகாரை சிங்கள இந்து விரோத அரசு கட்டுகிறது.

ஓமந்தை, சேமமடு, மாங்குளம், பரந்தன், பூநகர், மாதகல், நயினை, நாகப்பூசணியம்மன் ஆலயம் அருகே 67 அடி புத்தர் சிலை கன்னியா வெந்நீர் ஊற்றில் பௌத்த விகாரை… இப்படி பட்டியல் நீளும்.
ஆயுதம் கொண்டும், அடாவடி தனத்தோடும் சிங்கள இராணுவத்தை துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க உலகில் அன்பையும் தர்மத்தையும் போதித்த புத்தரை காணி ஆக்கிரமிப்பாளனாக மாற்றி கடவுளின் பெயரால் கொடுஞ்செயல் புரிவது புத்தருக்கே செய்யும் துரோகம்.

புத்தர் உயிரோடு இருந்திருந்தால் சிங்களவர்கள் என்னை தொழ வேண்டாம் என்று சொல்லியிருப்பார். புத்தர் உயிரோடு இருந்திருந்தால் சிங்கள அரசு செய்யும் இந்து விரோத தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நிச்சயமாக போராடியிருப்பார்.

புத்தர் போதனை பரப்பும் புனித குருமார்கள் ஆலய ஆக்கிரமிப்பு பணியில் அன்றாடம் ஈடுபடுகிறார்கள். இந்துக்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறார்கள். புத்தன் போர்வையை போர்த்திக்கொண்டு குணரத்னே என்ற புத்த பிக்கு கொக்கிளாய் என்னும் ஊரில் ஞானசம்பந்த மணிவண்ணதாஸ் என்ற இந்துவின் சொந்த காணியையும் அரசு மருத்துவமனை இடத்தையும் எந்த ஆவணமும் இன்றி ஒரு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

காணி இழந்த ஞானசம்பந்த மணிவண்ண தாஸ் என்பவருக்கு நீதியில்லை, ஆதரவுக்கு யாரும் இல்லை. கண்ணீரும் கம்பலையுமாக தீக்குளிப்பு நடவடிக்கை போன்ற வன்செயல்களில் ஈடுபடட்டுமா என்றார்.

உங்களுக்காக இந்தியாவில் நான் அறப்போராட்டம் நடத்துகிறேன் என்று உறுதியளித்தேன்.

இறந்தவர்களையும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களையும் ஐ.நா.சபை புனித பிரதேசங்களாக அறிவித்துள்ளது,

 ஆனால் முல்லைதீவு மாவட்டம் முள்ளியவிளையில் உள்ள மாவீரர்கள் துயிலும்இல்லத்தை உடைத்து அங்கே புத்தர் சிலையை வைத்திருக்கிறார்கள் அன்பையும் தர்மத்தையும் போதித்த புத்தபெருமான் சிங்கள அரசின் இந்த நடவடிக்கையை ஒருபோதும்
பொறுத்துக்கொள்ளமாட்டார்.

இலங்கையில் இந்து ஆலயங்களை உடைத்தும், அழித்தும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, இலங்கை அதிபர் சிறி சேனா அவர்கள் இந்தியாவில் சீதைக்கு கோவில் கட்டுவதாக உறுதி கொடுக்கிறார்.


முதலில் இலங்கையில் உடைக்கப்பட்ட இந்து கோவில்களை கட்டிக்கொடுக்கட்டும். இந்து ஆலய ஆக்கிரமிப்பை நிறுத்தட்டும்.

சிங்களதேசம் தமிழர் பிரதேசங்களிலே புத்தர் விகாரைகளை நிறுவுவதற்கு ஏற்றவகையில்

பௌத்தம் என்பது இந்துமதத்தின் ஒரு உட்பிரிவுதான் என்று பௌத்தமயமாக்கலுக்கு ஆதரவான கருத்தியலை இலங்கை விதைத்துவருகிறது. இலங்கை அரச தலைவர்கள் இந்தியாவிற்கு விஐயம் செய்யும்போது திருப்பதியில் உள்ளிட்ட பிரதான வணக்க தலங்களை வழிபடுவதோடு இலங்கையில் தமிழர் பிரதேசங்களிற்கு விஐயம் செய்யும் போது தமிழக தலைவர்களையும் தங்களுடன் இந்து ஆலயங்களிற்கு
அழைத்துச்செல்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 பௌத்தமயமாக்கலை இலக்காகவைத்து இலங்கை அரசு முன்னெடுக்கும்  செயற்பாடுகளிற்கு ஈழத்தில் வாழும் எந்தவொரு தமிழரும் நேரடி யாகவோ மறைமுகமாகவே வாய்பினை உருவாக்கிக் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கூறுகின்றேன்.

பலுசிஸ்தான் மக்கள் படும் துயர்ப்பற்றி கவலைப்படும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோதி ஈழ இந்துக்களை பற்றி கவலைப்படாதது வருத்தம் அளிக்கவே செய்கிறது.

இழந்த நிலப்பரப்பை மீட்கவும், இழந்த மக்கள் தொகையை மீட்கவும், தாய் நாட்டை தாய் மதத்தை, தாய் மொழியை காத்திட போராடிய நம் முன்னவர்களின் முழு ஆசீர்வாதத்தோடு வரும் செப்ரெம்பர் 24, 2016 அன்று யாழ்பாணம் நகரில் கூடுவோம். 

இந்துக்கள் ஆலயம், இந்து அடையாளம், வழிப்பாட்டு உரிமை காத்து சுதந்திரமாக வாழ்ந்திடவும் இன்று நாம் வீதிக்கு வந்து போராட வேண்டும். இன்று வீதிக்கு வராவிட்டால் நாளை வீதிக்கே வந்துவிடுவோம்.

தாய்நாடு காக்கும், தாய் மதம் காக்கும் வீரர்களுக்கு என்றுமே மரணம் இல்லை. இலங்கையில் இந்து கோவில் அழிப்புக்கு எதிராகவும், சிவ பூமியை புத்த பூமியாக மாற்ற முயற்சிக்கும் சிங்கள அரசுக்கு எதிராக எங்கள் இந்து சொந்தங்களை காத்திட, பாரத பிரதமர் இலங்கை இந்துக்களை காத்திட இலங்கை அரசோடு பேசவலியுறுத்தியும் குறிப்பாக தமிழர் பிரதேச ங்களிலே நிறுவப்பட்ட அனைத்து பௌத்த விகாரைகளையும் அப்புறப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும்  இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை நகரில் வரும் 23 செப்ரெம்பர் 2016 அன்று உண்ணாவிரத அறப்போராட்டம் இந்து மக்கள் கட்சியின் சார்பிலே  தமிழகத்தில்; முன்னெடுக்கவுள்ளோம்.

இலங்கை இந்துக்களின் உரிமைக்காக போராடும் எங்களுக்கு உங்களிடமிருந்து அன்பையும் வாழ்த்தையும் வேண்டுகிறேன்.

எழுக தமிழ் நிகழ்விலே கைகோர்த்துள்ள இந்துக்களே கலங்கிடவேண்டாம், தயங்கிட வேண்டாம் உங்களோடு நாங்கள் இருக்கிறோம். கண்ணை இமை காப்பதுபோல்,

இலங்கை தமிழர்களை இந்திய இந்துக்கள் காத்திடுவோம்.

நன்றி.
என்றும் தேசப்பணியில்,
(இராம.ரவிக்குமார்)

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...