SHARE

Sunday, September 18, 2016

இனப்பிரச்சினைக்குத் தீர்வு-13ஆவது திருத்தச்சட்டம் ரணில்

இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவுக்கு வரவேற்பு
13ஆவது திருத்தச்சட்டமே இனப்பிரச்சனைத் தீர்வுக்கான  அடிப்படை - ரணில்

யாழ்ப்பாணத்தில் ரணில்

SEP 18, 2016 | 2:19by யாழ்ப்பாணச் செய்தியாளர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பலரது எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே நாட்டில் அதிகாரங்களைப் பகிர்ந்திருக்கிறது.

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை.

இப்போது நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டியிருக்கிறது.

இந்து சமுத்திரம் பொருளாதாரத்தில் முக்கிய பிரதேசமாக இப்போது மாறி வருகின்றது. அதன் மத்தியில் இருக்கின்ற நாங்கள், அதன் மூலம் நன்மைகளைப் பெற்று முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாகத்தான் நாங்கள் ஒரு சக்தி மிக்க நாடாக உருவாக முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ள காணாமல் போனோருக்கான பணியகம் எவரையும் துரத்திச் சென்று பழி வாங்குவதற்காக அமைக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்டவர்களுடைய மனங்களில் உள்ள துன்பங்களைப் போக்கி அவர்களுக்கு அமைதியை ஏற்படுத்துவதற்காகவே அது அமைக்கப்படவுள்ளது.

அது மட்டுமல்ல. பிரச்சினைகளுக்குத் தீரவு காண்பதற்காக உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையொன்றையும் உருவாக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...