Wednesday 6 July 2016

UN உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது – கூட்டு எதிர்க்கட்சி

அல் ஹூசெயின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது – கூட்டு எதிர்க்கட்சி:

06 ஜூலை 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென்றோ அல்லது வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் என்றோ அல் ஹூசெய்ன் வலியுறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் அல் ஹூசெய்ன் வெளியிட்ட கருத்து தொடர்பில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அல் ஹூசெய்னின் நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


மேற்குல சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எவ்வாறு அல் ஹூசெய்ன் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...