Sunday 10 July 2016

21 ஆம் ஆண்டு நவாலி நரபலி


சந்திரிக்காவின் இனப்படுகொலை!

நவாலி நரபலி ENB Poster 2016
ரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் `முன்னேறிப் பாய்ச்சல்` இராணுவ நடவடிக்கை..1995.07.09 ஆம் திகதியன்று ஆரம்பித்தது.  பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்தனர்.

இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன்னேற முயன்ற மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் விமானப்  படையினர் விமானக்குண்டு வீச்சுக்களை மேற்கொண்டனர். 

மக்கள் தேவாலயங்கள்,கோவில்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு படையினர் அறிவித்தனர்.

நவாலி நரபலி பலியான மக்கள்
 இதற்கமைய இராணுவம் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப்பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலிருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகரத் தொடங்கினர்.

அந்த விதத்தில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களில் ஒரு பெரும் தொகையினர் நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்தத் தேவாலயத்தை இலக்கு வைத்து விமானப் படையினரின் புக்காறா விமானங்கள் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த 153 பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

நவாலி நரபலி பலியான மக்கள்
குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையிலிருந்து பலாலி இராணுவ முகாமிலிருந்தும் அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளிலிருந்தும் ஊர்மனை நோக்கி நாலாபுறமும் ஷெல் பீரங்கி தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன.

திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலி. மேற்கு, வலி.தெற்கு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளை நோக்கி காலை 5.40 மணியளவில் இருந்து மும் முனைத்தாக்குதல் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியில் உள்ள மக்கள் உடுத்த உடைகளுடனும் கையில் அகப்பட்ட உடைகளுடனும் கண்ணீரும் கம்பலையுமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

நவாலி நரபலி பலியான குழந்தைகள்

மாட்டுவண்டிகளிலும் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் லான்ட்மாஸ்ரர்களிலும் வட்டுக்கோட்டை, சங்கரத்தை, வளுக்கையாற்றுவெளி, நவாலி வீதி, நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி, சங்குவேலி, கட்டுடை மானிப்பாய் பிர தான வீதி வழியாக அவர்கள் சென்றனர்.

அவ்வேளையில் சகல வீதிகளிலும் எறி கணை தாக்குதல், ஹெலி தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. வீதிக்கு வீதி சடலங்கள்,
காயமடைந்த வர்களை எடுத்துச்செல்லக்கூடிய அளவிற்கு வாகன வசதிகளோ, மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இருக்கவில்லை.

யாவும் செயலிழந்துவிட்ட அவலநிலை.

காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி, முதலுதவிச்சிகிச்சையின்றி, இரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த அந்த நாளைய நிலைமையை இலேசில் மறந்து விடமுடியாது.


நவாலி நரபலி ஓவியம்
அன்றைய தினம் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறி குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக மக்கள் திரள் திரளாக நவாலி சென்.பீற்றர் தேவாலயத் திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும்களைப் படைந்த  நிலையில் தஞ்சமடைந்தனர்.

அவ்வேளையில் விமானம் மூலம் 13 குண்டுகள் தொடர்ச்சியாக மக்கள் குவிந்திருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. சில கணங்களில் எங்கும் “ஐயோ’ என்ற அவலக் குரல்கள் அப்பகுதியை அதிர வைத்தன. விமானக் குண்டு வீச்சுக் காரணமாக 153 பேர் உடல் சிதறி கையிழந்து கால் இழந்து தலையிழந்து குற்றுயிராக கிடந்த கொடூரக்காட்சி இன்றும் மறக்க முடியாததாகும். இந்தக் கொடூர சம்பவத்தில் 153 பேர் உடல் சிதறி பலியானதுடன் பெரும் எண் ணிக்கையானோர் ஊனமானார்கள்.

இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவாக நவாலி வடக்கு புலவர் வீதியிலும், நவாலி புனித பேதுறுவானவர் வீதியிலும் நினைவு சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


நவாலி நரபலி பலியான மக்கள் நினைவுச் சின்னம்

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் (09.07.2016) இன்றாகும். வரலாற்றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய வேளையில் (09.07.1995) ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர்களாலும் பாதுகாப்புப் பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை இதுவாகும். மூன்று குண்டு வீச்சு விமானங்கள் ஒரே நேரத்தில் இந்த கோர தாக்குதலை மேற்கெண்டன.

தமிழர் தாயக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத இரத்தக்கறை படிந்த கோரமான கொடூரநாள் 09.07.1995 ஆகும்.


                                                    நவாலி நரபலி பலியான மக்கள் நினைவுச் சுடர்







No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...