ஏறத்தாழ இரண்டே கால் நூற்றாண்டாக உலகத்தொழிலாள வர்க்கம் இந்த அடிப்படையான உரிமையை உத்தரவாதம் செய்து கொள்ள இயலவில்லை. முதலாளித்துவத்தின் கீழேயே அடையப்பட இயலாததாக ஆகிவிட்ட ஜனநாயகக் கோரிக்கையை ஏகாதிபத்தியத்தின் கீழ் அடைவது அறவே சாத்தியமற்றதாகும்.ஏனெனில் ஏகாதிபத்தியம் என்பது அருவருக்கத்தக்க நிதி மூலதன பாசிசமாகும்.
`கறுப்புத் தோல் தொழிலாளி` எனஒரு பிரிவை நாமம் சூட்டி, தன்னை `வெள்ளைத் தோல் தொழிலாளி` எனக்கருதும் தொழிலாளி வர்க்கம் தன்னை ஒருபோதும் தனது அடிமைத்தளையில் இருந்து விடுவித்துக்கொள்ளாது. நமது சிறு மதிப்பிற்குரிய இடதுசாரிகள் கார்ல் மார்க்சைப் படிக்க வேண்டும்!
சொந்த நாட்டிலும் சரி கண்டங்களிலும் சரி உலகிலும் சரி,எங்கெல்ஸ் கண்ட அந்த உலகை மீள உருவாக்க வேண்டுமானால், உலகத் தொழிலாளர் ஒன்றுபடவும், ஒடுக்கப்படும் தேசங்கள் ஒன்றுபடவும், ஒடுக்கும் தேசத் தொழிலாளர் ஒடுக்கப்படும் தேசத் தொழிலாளருடன் ஒன்றுபடவும் தடையாக உள்ள கூறுகளை,போக்குகளை எதிர்த்து ஈவிரக்கமற்றுப் போராட வேண்டும்.
இலங்கையில்`ஐக்கியம்`பேசக்கூடாது,`பிரிவினை`பேச வேண்டும்.
ஜாரின் கொடுங்கோன்மையின் கீழிருந்த ரசியத் தொழிலாள வர்க்கத்துக்கு லெனின் போதிக்கும் வரைக்கும் தெரியாது,தமது சக ஐரோப்பிய தொழிலாளி
வர்க்கம் எப்படி தன்னை அமைப்பாக்கி போராடி தனது உரிமைகளை வென்றெடுத்தது என்று.அவருடைய போதனையின் ஒளியில் தான் ரசியா விடிவுகண்டது.முதல் சோசலிச தாயகம் உலகில் மலர்ந்தது.மக்களின் வாலைப் பிடித்து, தமது பின்தங்கிய நிலைமையை தாங்கிப் பிடிக்கும் சந்தர்ப்பவாதிகளால் புரட்சிக்கு தலைமை ஏற்க முடியாது.
ஏகாதிபத்திய மிகை உற்பத்தியின் வெறித்தன வேட்டையில் உலக தட்ப வெப்ப நிலை முற்றாக தலை கீழாக மாறி விட்ட சூழலில் ஐரோப்பாவின் வசந்தகாலம் மே முதல் நாள் என்று இன்று கூற முடியாது.குறைந்தபட்சம் கால நிலை அறிவித்தலே அதை ஏற்காது.
ஆனால் அவ்வாறிருந்த கால நிலை வழியில் வசந்தத்தின் திருப்பு முனையாக
இருந்த அந்த தினத்தை தான் அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மானுட விடுதலையின் புரட்சித் திருநாளாக மாற்றியது.
8 hours work, 8 hours rest, and 8 hours recreation.
எட்டு மணிநேர உழைப்பு!
எட்டு மணிநேர ஓய்வு!
எட்டுமணி நேரம் மீள் உழைப்புக்கான
உருவாக்கம்!
தோழர்களே தற்கால வார்த்தையில் இந்த `மனித உரிமைக் கோரிக்கை` 210 ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை.
மே நாள் வாழ்க!
ஆனால் அவ்வாறிருந்த கால நிலை வழியில் வசந்தத்தின் திருப்பு முனையாக
இருந்த அந்த தினத்தை தான் அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மானுட விடுதலையின் புரட்சித் திருநாளாக மாற்றியது.
8 hours work, 8 hours rest, and 8 hours recreation.
எட்டு மணிநேர உழைப்பு!
எட்டு மணிநேர ஓய்வு!
எட்டுமணி நேரம் மீள் உழைப்புக்கான
உருவாக்கம்!
தோழர்களே தற்கால வார்த்தையில் இந்த `மனித உரிமைக் கோரிக்கை` 210 ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை.
மே நாள் வாழ்க!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
No comments:
Post a Comment