SHARE

Sunday, February 07, 2016

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தவறு - ஐ.நா



அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தவறு 
விக்கியிடம் அல் ஹூசெய்ன் தெரிவிப்பு:
07 February 2016

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தவறு. அரசியல் கைதிகளை வழக்கு விசாரணையின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.

அக் கலந்துரையாடலின் பின்னர் அது குறித்து,  வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ,

கடந்த வருடம் ஜெனீவாவில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானம் எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது சம்பந்தமாக அறிந்து கொள்வதற்காகவும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்ளவும் , பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார்.

அதன் போது சிறையில் இருப்பவர்கள் சம்பந்தமாகவும், காணாமல் போனோர் சம்பந்தமாகவும், காணிகளை பறிகொடுத்தவர்கள் சம்பந்தமாகவும், கவனம் செலுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

நாம் பலவிதமான பிரச்சனைகளை அவரிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை அவர் கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்கு  தற்காலத்தில் பொது மன்னிப்பு கொடுப்பது சம்பந்தமாக சர்வதேச சமூகம் சரி என்று ஏற்றுக் கொள்ளவில்லை எனவும்,  சிரியாவில் பொது மன்னிப்பு கொடுப்பது தவறு என தான் கூறியதாகவும் கூறினார்.

பொது மன்னிப்பை விடவும், அவர்களுடைய வழக்குகளை துரிதகதியில் விசாரணை செய்து விடுதலை செய்வதே முறை என குறிப்பிட்டார்

அதன் போது அவரிடம் நான், வழக்கை விரைந்து நடத்தி முடிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறினேன். அது சமபந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

காணமல் போனோர் தொடர்பான தரவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளித்து உள்ளார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...