மக்கள் விசாரணைக்கு: ஆனந்தபுர விசவாயுத்தாக்குதல்
https://www.facebook.com/enb.tenn?pnref=story
இந்த வீடியோ இணைப்புக்கு நாம் உரித்துடையவர்கள் அல்லர் ஆதலால் அந்த பிறர் இணைப்பு நீக்கப் பட்டால் ஒளிப்படத்தைக் காண இயலாமல் போகக் கூடும்.
ஒளிப்பட நாடாவின் நிழல் பட காட்சி தொகுப்பு.
காட்சிக் குறிப்புகள் நமது கணிப்புகள். ENB
தோழமையுடன் வாசகர்களுக்கு,
முதல் ஈழ யுத்தத்தின் முக்கிய கட்டத்தில் ஆனந்தபுரச் சமர் நிகழ்ந்தது. எதிரிக்கு பேரிழப்பை ஏற்படுத்திய வீரப்போர் இதுவாகும்.இதனால் எதிரி கோழைத்தனமாக விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையை யுத்த தர்மங்களையும்,சர்வதேச யுத்த நெறிமுறைகளையும் மீறி விச வாயுக்களை வீசி தகர்த்தான்.இந்த எதிரி சிங்களம் மட்டுமல்ல அமெரிக்க குறிப்பாக இந்திய விரிவாதிக்க அரசுமேயாகும்.இதன் விளைவாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறியது.இதனை யுத்தக் குற்றம் என்றும், நீதி விசாரணை தேவை என்றும் கோரிய நியாயவாதிகளும், நீதிமான்களும்,ஊடக ஜாம்பவான்களும், முக்கியமாக எப்போதும் நடு நிலையான சிவில் சொசைட்டிகளும் அடங்கிய இச் சர்வதேசப் பரிவாரத்தில், எவரும் ஆனந்தபுரத்தை பற்றி கேள்வி எழுப்பவில்லை, எதிரி தொலைந்தான் என்கிற ஆனந்தத்தில், அடியோடு மறந்து விட்டனர்,மறைத்து விட்டனர்,தமிழ் நெற் உட்பட! ஆனால் ஈழ யுத்த விசாரணையில் ஆனந்தபுர விசாரணை மையமானதாகும்.இந்த விசாரணையை மக்களே நடத்தியாக வேண்டும்.
இதற்கு துணையாக அண்மையில் நாம் அறிந்த விசாரணைக்குரிய தகவலை இங்கே பரிமாறுகின்றோம்.
இந்த வீடியோ இணைப்புக்கு நாம் உரித்துடையவர்கள் அல்லர் ஆதலால் அந்த பிறர் இணைப்பு நீக்கப் பட்டால் ஒளிப்படத்தைக் காண இயலாமல் போகக் கூடும்.
ஒளிப்பட நாடாவின் நிழல் பட காட்சி தொகுப்பு.
காட்சிக் குறிப்புகள் நமது கணிப்புகள். ENB
பெரும்பாலும் இது பலாலி விமான நிலையம்
சிறீ லங்கா தேசியக் கொடி பொறித்த தலைக்கவசத்துடனும் சீருடையுடனும் இரு இராணுவ அதிகாரிகள்
இராணுவப் பொறுப்பாளர்கள் இறக்குமதி ஆயுதங்களை பார்வையிடப் பயணம்
படைக்கல சிற்றூழியர்களுக்கு தலைமை அதிகாரி கடமை விளக்கம்
நாசகாரக் குண்டுகள் போர் பயண விமானத்தில் இணைப்புக்குத் தயாராக
இணைக்கக் காவிச் செல்லும் படைக்கலச் சிற்றூழியர்
இணைப்புக் கடமையில் படைக்கலச் சிற்றூழியர்
`கடமைக்கு` த் தயார்!
சாதாராண குண்டு வீச்சு
விசவாயுக் குண்டு வீச்சு
No comments:
Post a Comment