Friday, 1 January 2016

ENB புரட்சிகர புதிய வருட வாழ்த்துகள்!



அன்பார்ந்த தமிழீழ மக்களே, ENB வாசகர்களே,தோழர்களே, புதிய தலை முறைக் குழந்தைகளே;

நாட்காட்டி வழிப்பட்ட புதிய 2016 பிறந்துவிட்டது, தங்கள் அனைவருக்கும் எமது புரட்சிகர புதிய வருட வாழ்த்துகள்.

2016 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரம் பற்றி பல அறிக்கைகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன.சிலவற்றை மட்டுமே கற்க முடிந்துள்ளது.எனினும் அவை 2016 இன் உலகப் பொருளாதாரம் 2015 இலிருந்து எவ்வகையிலும் மேலானதாக இரா என கட்டியம் கூறுகின்றன.சீனப் பொருளாதார வளர்ச்சியின் இறங்கு நிலையை காரணமாகக் கூறுகின்றன! ஆக இந்த நாட்காட்டி ஆய்வே மேம்பாட்டுக்கான அறிகுறிகளைக் காட்டவில்லை!

ஆனால் மிகை உற்பத்திக்கும் வாங்கும் சக்தி இழப்புக்கும் இடையான அடிப்படையான ஏகாதிபத்திய உலகமய பொருளுற்பத்தி முறையின் நெருக்கடியை இந்த நாட்காட்டி ஆய்வுகள் மூடி மறைக்கின்றன.

மேலும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண, காலத்துக்கு காலம், நேரத்துக்கு நேரம்,ஆண்டுக்கு ஆண்டு, ஆட்சிக்கு ஆட்சி, தலைவருக்கு தலைவர் வெவ்வேறு காரணங்களைக் கற்பித்தாலும், இவை அத்தனையையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும், மூன்றாவது உலக மறு பங்கீட்டுப் போரில் குதித்துள்ளார்கள் என்பதையும் மூடி மறைக்கின்றன.

ஆக உலக மறுபங்கீடே இன்றைய உலகை ஆளும் மெய்யான விதியாகும்.

இலங்கையில் இது 2015 ஜனவரி 8 ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது.இது `அமைதிப் புரட்சி` என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையில் ரணில் மைத்திரி பொம்மை ஆட்சியை நிறுவியதன் மூலம், உலக மறுபங்கீட்டின் அமெரிக்க இந்திய முகாமின் இராணுவக் காலனியாக இலங்கையை மாற்றிவிட்டனர் சிவில் சொசயைட்டிகள்..!

ரணில் மைத்திரி பாசிஸ்டுக்கள் நல்லாட்சி என்கிற பெயர் சூட்டி இந்த இராணுவக் காலனியைக் கட்டியமைத்து வருகின்றனர்.



படைப் பெருக்கம் வேறெந்த வகையிலும் நியாயம் செய்ய இயலாத அளவுக்கு தொடர்ந்து பெருகி வருகின்றது.

இராணுவச் செலவினம் சமாதான காலத்தில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்து வருகின்றது.


இவ்வாறு உள்நாட்டு யுத்தம் ஓய்ந்ததன் விளைவான சேமிப்புகளை, அமெரிக்க இந்திய முகாமின் உலக மறுபங்கீட்டு யுத்தத்துக்கு சேவகம் செய்யும் இராணுவக் காலனியாக இலங்கையை மாற்றுவதில் முதலீடு செய்கின்றது ரணில் மைத்திரிப் பாசிச இனப்படுகொலைச் சிங்களம்.

இதற்கு மேல் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு அரங்கேற்றிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு சொந்த நாட்டு மக்கள் குறித்தோ, தேசியக் கடமைகள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலை கிடையாது.

ஒற்றையாட்சி சிங்களம் இந்த ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க சேவகத்துக்கு ஈழத்தையும் இழுத்துச் செல்கின்றது.

ஈழ - புலம்பெயர், ஏகாதிபத்திய தாச சமரசவாத கும்பல்கள் -( கட்சி ஸ்தானபங்கள், ஊடகங்கள்) இதற்கு துணைபோகின்றன.

புதிய ஈழப்புரட்சியாளர்களாகிய நாம் இப்புதிய ஆண்டில் பின்வரும் கடமைகளை நிறைவேற்ற ஓரணி திரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

* ஏகாதிபத்திய மிகை உற்பத்தி நெருக்கடியை, உலக மறு பங்கீட்டு போராக மாற்றுவதை எதிர்ப்போம்! 
* உலக மறு பங்கீட்டு போருக்கு இலங்கையை இராணுவக் காலனியாக்கும் ரணில் மைத்திரி பாசிச அரசை தூக்கியெறிவோம்!

 * ஈழ தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த சிறீலங்கா-தமிழீழ, ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தேசிய சுதந்திர  உழைக்கும் மக்கள் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
இனிய 2016 புரட்சிகர புதிய வருட வாழ்த்துகள்! 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்.


No comments:

Post a Comment