சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய காலனியாதிக்க காட்டுமிராண்டி சாம்ராஜ்ஜத்தில் சைப்பிரசும் ஒரு கைதி.1960 இல் இது ``சுதந்திரம்``பெற்றது.இருந்த போதும் இந்த ``சுதந்திரத்தை``வழங்கிய ராஜ வம்சம் தனது ஏகாதிபத்திய அரசாதிக்கத்துக்கு ( இறையாண்மைக்கு) உட்பட்ட இரண்டு படைத்தளங்களை உத்தரவாதப்படுத்திக் கொண்டுதான் இந்த ``சுதந்திரத்தை`` வழங்கியது. இந்தப் படைத்தளங்களில் இருந்துதான்,பிரித்தானியா தனது பங்குக்கான சிரிய,மத்திய ஆசிய மூன்றாவது உலக மறுபங்கீட்டு காலனியாதிக்க யுத்தத்தை ஏவுகின்றது. குருச்சேவ் திருத்தல்வாதத்தின், பேரப் பிள்ளைகளும்,பூட்டப் பிள்ளைகளும் ஆன,நமது தற்கால ஏகாதிபத்திய தாசர்கள் இனிமேலும் அரைக்காலனிய நாடுகளை சுதந்திரம் பெற்ற நாடுகள் என்று பேசுவார்களேயானால், அவர்கள் ஏகாதிபத்திய அடிமைகள் அல்ல,ஸ்பாட்டகர்ஸ் கால அடிமைகளே.
No comments:
Post a Comment