SHARE

Saturday, October 31, 2015

யாழ் முஸ்லிம்கள் ஆணைக்குழு அமைக்க கோரிக்கை

முதலமைச்சர் அவர்களே முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள் : யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை  நினைவுகூரும் வகையில் யாழ். முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பில்
1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லீம்களின் ``இனச்சுத்திகரிப்பு``,30-10-1990 கரி நாள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே யாழ்.முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள்!

யாழ் அரச அதிகாரிகளே முஸ்லிம்கள் குடியேற உதவி செய்யுங்கள்!

எம்மை வெளியேற்றி என்ன பலன் கிடைத்தது!

போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.








No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...