``விதைத்தோம் தமிழினியின் வித்துடலை``
முள்ளிவாய்க்கால் யுத்த ஒய்வுக்குப் பின்னால், சிங்களத்தின் போர்க் கைதியாக இருந்த சூழ்நிலையின் விளைவாக, புற்று நோய் பெருகி சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் (சிவகாமி ஜெயக்குமரன்), வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.
முன்னதாக, பரந்தன், சிவபுரத்தில் உள்ள தமிழினியின் இல்லத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, தமிழினியின் வித்துடல், பேரணியாக கோரக்கன் கட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது கணவன், இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட பின்னர், வித்துடல் (20-10-2015) அன்று விதைக்கப்பட்டது.
|
உறைந்த உயிர்: மனையில் தமிழினி |
|
தமிழினி:வாசல் தாண்டி |
|
வீதியில் தோரணம் |
|
வழியனுப்ப வழி நடப்போர் |
மண்குழி நோக்கி
|
மயானத்தில் மக்கள் திரள் |
|
போர்சுமந்த தமிழினியை தோள் சுமக்கும் தேசம் |
|
வித்துடல் விதைப்பு
|
No comments:
Post a Comment