ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்காவின் துரோகம்
ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி யுத்தத்தில் இராஜபட்சே கும்பலுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் துணைபோயின. ஆனால் போர் முடிந்த பிறகு இன அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர் குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை அமெரிக்கா கோரியது.
ஆரம்பத்தில் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த இந்தியா பின்னர் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சர்வதேச விசாரணை கோரியது.
தற்போது இராஜபட்சே ஆட்சி வீழ்ந்த பிறகு, இலங்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஆதரவாக சிங்கள இன வெறிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம், இராஜபட்சே மீதான போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் இலங்கை அரசே அந்த விசாரணையை நடத்திக் கொள்ளலாம் எனவும் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
மேலும் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததாலோ, தமிழர் கூட்டணித் தலைவர் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- TNA தலைவர்-ப-ர்) சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றதாலோ சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பு நடவடிக்கைகள் தடுக்கப்படவில்லை. இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே, அமெரிக்க இந்திய அரசுகளின் துரோகத்தை எதிர்த்து போர்க்குற்றவாளி இராஜபட்சே மீது சர்வதேச விசாரணை கோரியும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஈழத் தமிழின அழிப்புக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டியும் தமிழ் மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
( கழக தியாகிகள் தின பிரசுரத்தில் இருந்து)
No comments:
Post a Comment