உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும்
Submitted by P.Usha on Sat, 08/29/2015 - 10:28
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த உண்மைகளை கண்டறிய உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதாக புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. இந்த அரசாங்கம் அதை முழுமையாக நிறைவேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் அரசியல் தலைமைகளின் நம்பிக்கையும் அவர்கள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையுமே இன்னும் நிறைவேறாது உள்ளது. அது நிறைவேறக் கூடியதும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது ஏற்பட் டுள்ள புதிய நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்ற போராட்டமே கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்து நாட்டில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை தடைகள் இன்றி அனுபவிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. வடக்கில் இன்று இராணுவ அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை யாரும் முன்வைபதில்லை. தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாரும் போராடவில்லை.
கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது நம்பத்தகுந்த நபர்களை வைத்து மேற்கொண்ட சர்வாதிகார நடவடிக்கைகள் அனைத்தும் சிறுபான்மை மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியது.
அந்த செயற்பாடுகள் சர்வதேசம் வரையில் கொண்டுசெல்லப்பட்டு நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்களை தோற்றுவித்தன. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சர்வதேச தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதற்கான விசாரணைகள் உள்ளக பொறிமுறைகளின் மூலமாக
நடைபெற வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அந்த நிலைப்பாட்டில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
எனினும் கடந்த காலங்களில் சர்வதேசம் எமக்குக் கொடுத்த கால அவகாசத்தில் நாம் உள்ளக விசாரணை பொறிமுறைகளை சரியாக நடைமுறைப் படுத்தினோமா என்பதில் சிக்கல் உள்ளது. ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் தமிழ் அரசியல் தலைமைகளின் நம்பிக்கையும் அவர்கள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையுமே இன்னும் நிறைவேறாது உள்ளது. அது நிறைவேறக் கூடியதும் அல்ல.
இப்போது வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதைப்பற்றி எம்மால் கணிப்பிட முடியாது. ஆனால் மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் இருந்த கடுமையான போக்கினை இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் சர்வதேசம் கையாளவில்லை.
மேலும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற உண்மைகளை கண்டறிய உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதாக இலங்கையின் புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. இந்த அரசாங்கம் அதை முழுமையாக நிறைவேற்றும். அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் சர்வதேசமும் எம்மீதான நம்பிக்கையை பலப்படுதியுள்ளதால் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு இனி ஒரு அவசியம் இல்லை. அதை நாம் அனுமதிக்கப் போவதுமில்லை என்றார்.

No comments:
Post a Comment