Friday, 17 July 2015

மகிந்த மைத்திரி உண்மைச் சித்திரம்

Daily Mirror LK Cartoon 17-07-2015
மகிந்தவின் மறு பிறப்பு!
==================================

புதிய ஈழப்புரட்சியாளர்களின் முன் அநுமானம் 
ஏப்ரல் 2015
=============================================

2015 மே நாள் முள்ளிவாய்க்கால் போர்வீரம் நீடூழி வாழ்க!
                                          கட்டுரையில் இருந்து:

`` பக்சபாசிஸ்டுக்களின் மீள்வருகைக்கான புறநிலை வாய்ப்புகள்:

1) இலங்கை அரசு இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது,
2) பெரும்பான்மைச் சிங்கள மக்கள், சிங்களப்பேரினவாத பெளத்தமதவாதத்துக்கு பலியாக்கப்பட்டவர்கள்.
3) ``முப்பது ஆண்டுகால புலிப்பயங்கரவாத்திடமிருந்து`` நாட்டை மீட்டவர் ராஜபக்ச!
4) ராஜபக்ச ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகம் உற்பத்தி செய்த தரகன் அல்ல, அவன் உள்நாட்டுத் தரகன்.
5) இலங்கை அரசியலில் என்றும் தீர்மானகரமான பாத்திரம் ஆற்றும் பெளத்த நிறுவன சமூக சக்திகளின் பலத்த ஆதரவு கொண்டவன்.
6) `ரணில்-சந்திரிக்கா-மைத்திரி-பொன்சேகா` கும்பல் அமெரிக்க இந்திய அந்நிய அரசுகளுடன் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு , `தேசபக்தன்` ராஜபக்சவுக்கு ஒரு பலமான தேர்தல் துரும்பாகும்.மகிந்த
ஒபாமாவைப்போல் எழுதியதைப் பேசும் கிளிப்பிள்ளையும்  அல்ல.
7) மைத்திரி கும்பலின் உலகமய இந்திய விரிவாதிக்க பொருளாதாராப் பாதை எவ்வகையிலும் பக்ச பாசிஸ்டுக்களின் பாதைக்கு மேலானது அல்ல.இதனால் ஒடுக்கப்படும் விவசாய உழைக்கும் மக்களை ராஜபக்ச தன் பக்கம் திரட்டிக்கொள்வான், நமது ஐக்கிய இலங்கை `இடது சாரிகள்` அதற்கு துணை நிற்பார்கள்.
8) ராஜபக்ச பலம் பெறும் போது மைத்திரியிடம் தாவிய `கொள்கைக் குன்றுகள்` மீண்டும் இரவோடு இரவாக பக்ச பாசிஸ்டுக்கள் பக்கம் தாவமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
9) சிங்கள வாக்குகளின் அடிப்படையில் மகிந்த பெறத்தவறியது சிறு தொகை தான்.தமிழ் மக்களின் வாக்குகள் தான் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கியது, இதைத் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
10) மைத்திரி வெற்றி பெற்றது ஜனாதிபதித்தேர்தலில், ஆனால் பொதுத் தேர்தலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி சந்தித்தாகவேண்டும்.

இவையெல்லாம் பொதுத்தேர்தலில் மகிந்த மீண்டெழுவதற்குள்ள புறவய வாய்ப்புகள் ஆகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் பலி கொள்ளப்படவில்லை, கிலி கொள்ள வைக்கப்பட்டிருக்கின்றார்கள், இதிலிருந்து அவர்களால் மீண்டெள முடியும், அதற்கான சமூக வேர்களும் புறச்சூழலும் உள்ளன! ``



No comments:

Post a Comment