பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த 1894 சட்டத்தில் கூட நியாயம் கேட்க நீதிமன்றத்தை அணுகமுடியும். ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தில் அதற்கு வழியேயில்லை. காங்கிரஸ் அரசின் சட்டம்
கார்ப்பரேட் நலன்களை ‘பொதுநலன்’ என்று கருதுவதைப் போலவே, பா.ஜ.க. அரசு கொண்டுவந்த இந்தச் சட்டமும் கார்ப்பரேட் நலன்களை ‘பொது நலன்’ என்று கருதினாலும், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள் கூட இச்சட்டத்தில் கைவிடப்படுகிறன.
* தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தில் முப்போகம் விளையும் நிலங்களைக் கூட கையகப்படுத்தலாம்.
* தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ளச் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரஸ் அரசு அளித்திருந்த விதிவிலக்குகளைக் கைவிட்டுள்ள அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளை விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்துள்ளது.
* பா.ஜ.க. அரசின் சட்டப்படி, அரசுத் துறைகளுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு தனியார் முதலாளிகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தாலும் விவசாயிகளின் ஒப்புதலை அரசு கேட்கத் தேவையில்லை.
* அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை.
* சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்துப் பரிசீலிக்கத் தேவையில்லை.
* கையகப்படுத்திய நிலம் 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலும் அதைத் திருப்பித்தர வேண்டியதில்லை.
* ‘தனியார்’ என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று காங்கிரஸ் கட்சியின் 2013ஆம் ஆண்டு சட்டம் வரையறுத்திருந்தது. ஆனால் பா.ஜ.க. அரசின் சட்டப்படி ‘தனியார்’ என்பது நபராகவோ தன்னார்வ நிறுவனமாகவோக் கூட இருக்கலாம்.
* அதுமட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவற்றையும் ‘பொதுச்சேவை’ என்று வரையறுத்துள்ளது. அவற்றிற்கு விளை நிலத்தைக் கையகப்படுத்தித் தரும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கிறது.
* நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்தச் சட்டத்தை அமலாக்கும் அரசதிகாரம் பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்குத் தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாதபட்சத்தில் அதை நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது.
இவைதான் பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களாகும்.
>>>>>>>>> சமரன்
No comments:
Post a Comment