SHARE

Monday, April 06, 2015

ஆலயத்திற்கு சென்ற அனந்தியை திருப்பி அநுப்பிய ``புதிய அரசுப்`` படையினர்!


பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்ற அனந்தி சசிதரன் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்

06 ஏப்ரல் 2015
 Bookmark and Share
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்ற அனந்தி சசிதரன் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

படையினரது ஆக்கிரமிப்பில் இருக்கும் உட்பகுதிகளது செழிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவருவதை தடுக்கவே தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

முன்னதாக இன்றைய தினம் பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதற்கு முன்னரும் பக்தர்களில் ஒரு பகுதியினரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைத்து சென்றிருந்த நிலையில் அங்கு அமைந்திருந்த மாட்டுப் பண்ணைகள் போன்றவை தொடர்பில் தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தான் பிறந்த பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை படையினர் இன்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

முதலில் அவரது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளை கையளித்துவிட்டு உள்ளே செல்லுமாறு படையினர் அறிவுறுத்தி உள்ளனர். எனினும் தான் ஒரு மாகாணசபை உறுப்பினரெனவும் தனது கைத் தொலைபேசியினையாவது கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் அனந்தி கோரியுள்ளார்.

இதனையடுத்து எழுந்த முரண்பாட்டை அடுத்து அவரை உள்ளே செல்ல படையினர் அனுமதித்திருக்கவில்லை. இதனிடையே அவர் பயணித்த ஒட்டோ வாகனத்தை படையினர் சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் எனினும் இராணுவப் பொலிஸார் தலையிட்டு அவரை வெளியேற அனுமதித்ததாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...