SHARE

Sunday, February 08, 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை தொடரும்


புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை தொடரும் 
புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்தார்.

வாரப்பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் , விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு கடந்த மகிந்த அரசில் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் தற்போது புதிய அரசு தோன்றியுள்ளது. இந்த நிலையில் தமிழ் அமைப்புக்களின் தடை குறித்து பிரதி அமைச்சரிடம் கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அத்துடன்  நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காது இருக்கும் வகையில் புதிய அரசு தடையினை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்றார்.

இதேவேளை, மகிந்த அரசின் ஆட்சியில் நாடுகடந்த தழிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட 15 அமைப்புக்களுக்கும், தனிதபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( மூலம் : ஊடகம்)

No comments:

Post a Comment

The Fate of “America First”

  The Fate of “America First” U.S. President Donald Trump at a press conference, Palm Beach, Florida, January 2026 How the Assault on Venezu...