வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னுரிமை -
சர்வதேச விவகார அமைச்சர் மங்கள சமரவீர 18 ஜனவரி 2015
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விபரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவை இலங்கை ஓரு வரப்பிரசாதமாக கருதுவதாக மங்களசமரவீர குறிப்பிட்டார் என இந்திய வெளியுறவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்
மேலும் பதவி ஏற்று ஐந்து நாட்களில் தான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இலங்கை வெளிவிவகார கொள்கைகளில் இந்தியாவிற்கே முன்னுரிமை அளிப்பதை புலப்படுத்துவதாகவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம், தமிழர்கள் நல்வாழ்வு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் இலங்கையில் தெரிவாகியுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் குறித்தும் அப்போது ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment