இருதரப்பு ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு
Jan 16, 2015 Bella Dalima
இலங்கையுடன் காணப்படுகின்ற இருதரப்பு ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் ஜீயெங்ஹோ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடியதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்புகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிவாரணங்கள் மற்றும் ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் நீண்டகால தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சீன முதலீட்டாளர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் இங்கு தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதால் இரு நாடுகளுக்கும் நன்மை கிட்டும் எனவும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment