SHARE

Sunday, December 28, 2014

மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்!

மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! - நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா!

[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 01:58.35 AM GMT ]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு  ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தக்கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். சிலர் பொதுநிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.

இதன்போது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, இறைமை என்பன குறித்து ஆராயப்பட்டன.

ஏற்கனவே அமைச்சர் பெசில் ராஜபக்ச ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

எனினும் அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு மைத்திரிபாலவின் நோக்கி உள்ளமையால் அவருக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில் இன்று முற்பகல் காங்கிரஸின் தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்கு நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல் பீடக்கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப்ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அமைச்சர் பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். குறித்த பேச்சுவார்த்தையில் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனறு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் மைத்திரிபாலவுக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் மு.கா தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்

நீதியமைச்சர் ரவுப் ஹகீம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் தமக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்கும்படி மு.கா வால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைள் இனியும் நிறைவேறப் போவதில்லையெனும் கட்டத்திலேயே மேலதிக கால தாமதமின்றி இம்முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...