SHARE

Sunday, November 23, 2014

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு: மு.கா. நாளை கூடுகின்றது


ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு: மு.கா. நாளை கூடுகின்றது

Submitted by MD.Lucias on Sat, 11/22/2014 - 18:06


ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள  இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாகவும் இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Nursing Uniform Reform

Pic:Google-Face Book   Nursing Uniform Reform Calls Grow for Change as Sri Lanka's Dress Code Faces Criticism By Humaira Riyas 17/01/20...