Tuesday 28 October 2014

புலித் தடை நீக்கம்! மேன்முறையீடு செய், ரணில் முழக்கம்!!




விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! மேன்முறையீடு செய்யுமாறு ரணில் கோரிக்கை

[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:05.58 PM GMT ]

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியும். எனினும் அரசாங்கம் எவ்வித மேன்முறையீட்டையும் மேற்கொள்ள முனையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் துணியாத போது ஐரோப்பாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் மீண்டும் கே.பி குழுவுக்கு சென்றடைந்து விடும்.

எனவே அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலி தடை நீக்கத்துக்கு எதிரான மேன்முறையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை இல்லாமையால் குறித்த மேன்முறையீட்டை அரசாங்கத்தினால் நேரடியாக மேற்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதையும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் சார்பில் குறித்த மேன்முறையீட்டை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...