Tuesday 29 July 2014

காசாப்படுகொலையைக் கண்டித்து இஸ்லாமியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்



காசாப்படுகொலையைக் கண்டித்து இஸ்லாமியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! அமெரிக்க இஸ்ரேலியக் கொடிகள் தீவைப்பு!!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று செவ்வாய்க்கிழமை புனித ரமழான் பண்டிகையைக் கொண்டாடும் அதே வேளை இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள்.

பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் இன்று காலை புனித ரமதான் தொழுகைக்காக ஒன்று கூடிய முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிப்பாக பலஸ்தீன் காஸா மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள் உட்பட, மேலும் படுகொலைப் படங்களையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டார்கள்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் வாசக அட்டைகளை ஏந்தியவாறு, யுத்தத்தை நிறுத்தவேண்டுமென முழக்கமிட்டனர்.

முடிவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் ஆர்பாட்டக்காரர்களினால் தீ மூட்டி எரிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...