Friday, 11 July 2014

வடக்கு ஆளுநராக மீண்டும் சந்திரசிறி - 2014



வடக்கு ஆளுநராக மீண்டும் சந்திரசிறி

வட மாகாணசபையின் ஆளுநராக தொடர்ந்தும் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி யே செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசிறியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்திருந்த நிலையில் அடுத்த ஆளுநர் தொடர்பினில் சர்ச்சைகள் தொடர்ந்தன.

வட மாகாணத்தின் ஆளுநராக 2009ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியினால் சந்திரசிறி நியமிக்கப்பட்டிருந்தார். ஜந்து ஆண்டுகள் பதவி வகித்து வந்த சந்திரசிறியை, மஹிந்த மீளவும் நியமித்துள்ளார்.

கூட்டமைப்பு, ` இடதுசாரி கட்சிகள்`, மற்றும் `சிவில் சொசைற்றி` என்.ஜி.ஓ க்கள்  வட மாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரி மக்களை ஏமாற்றி வந்தன.

ஏனெனில் 13வது திருத்த மாகாண சபைச் சட்டப்படி ஆளுநர் என்பது  `நியமன`, மற்றும் அனைத்து மைய அரசின் அதிகாரமும் குவிக்கப்பட்ட ஒரு பதவியாகும். 

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...