Tuesday, 10 June 2014

ஐ.நா விசாரணைக் குழு நாட்டுக்குள் நுழைய முடியாது – சிறிலங்கா அறிவிப்பு

ஐ.நா விசாரணைக் குழு நாட்டுக்குள் நுழைய முடியாது – சிறிலங்கா அறிவிப்பு

[ திங்கட்கிழமை, 09 யூன் 2014, 10:13 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

சிறிலங்காவில் போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள விசாரணைக் குழுவை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இந்த விசாரணைக் குழு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் நியமனம் தொடர்பாக, கடந்தவாரம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை தெரியப்படுத்தியிருந்தார்.

அத்துடன், அவர் நாளை ஜெனிவாவில் நிகழ்த்தவுள்ள உரையில், இந்த விசாரணைக் குழு பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதுடன், இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கோரவுள்ளார்.

அதேவேளை, ஜெனிவாவில் நாளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றவுள்ள தாம், சிறிலங்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு குறித்து விளங்கப்படுத்துவார் என்று ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...