SHARE

Tuesday, June 24, 2014

இந்திய விரிவாதிக்கத்தின் ஈழக் கடலாதிக்கத்தை முறியடிப்போம்!

இந்திய விரிவாதிக்கத்தின் ஈழக் கடலாதிக்கத்தை முறியடிக்க 
ஈழக்கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடி நிறுத்தப்படல் வேண்டும்!


இந்து சமுத்திரப் பகுதியில் அமைந்திருக்கும் எட்டு ஈழத்தீவுகளில் ஒன்று நெடுந்தீவு ஆகும். கச்ச தீவு தவிர யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு நெடுந்தீவு ஆகும். யாழ்ப்பாணத்திலிருந்து இதன் இடைத்தூரம் 45  கிலோமீட்டர்  ஆகும்.நெடுந்தீவும் அதைச்சூழ்ந்த கடற்பரப்பும் ஈழத்துக்குச் சொந்தமான சிங்களத்தின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.

30 ஆண்டுகால யுத்தத்தில் ஈழ மீனவர்கள் தங்கள் சொந்தக்கடலில் மீன்பிடிப்பதற்கு சிங்களம் எண்ணற்ற தடைகளை விதித்து வந்தது.ஆழ்கடல் மீன் பிடி தடை செய்யப்பட்டிருந்தது.`கடல் அடங்குச் சட்டம்` பிறப்பிக்கப்பட்டிருந்தது. படகு எந்திரங்களின் வலுவிற்குக் கூட எல்லை விதிக்கப்பட்டிருந்தது.முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய 5 ஆண்டுகளில் இன்னமும் ஈழ மீனவர்கள் தமது உழைப்புச் சுதந்திரத்தை உறுதி செய்ய இயலவில்லை.

யுத்தகாலப் பிரச்சனை 1983-2009

யுத்த காலத்தில் தமிழக மீனவர்கள் இந்தியக் கடற்படையாலும், சிங்களக் கடற்படையாலும் தாக்கப்பட்டனர்.அதற்குக் காரணம் புலிகளின் ஆயுதக் கடத்தலுக்கும்,அகதிகள் வருகைக்கும் தமிழக மீனவர்கள் உதவுகின்றார்கள் என்பதாகும்.இதற்காக தமிழக உழைக்கும் மீனவ வர்க்கத்துக்கும், சமூகத்துக்கும்,கடலோர மீனவக் கிராமங்களுக்கும் ஈழம் பெருதும் நன்றி கூறக்கடமைப்பட்டது.இது இல்லையென்றால் `தப்பிப் பிழைப்பதற்கு எமக்கு வேறெந்த வழியுமில்லால் மாண்டு மடிந்திருப்போம்`.

இன்றைய பிரச்சனை 2009-2014

இன்றைய பிரச்சனை தொழில் பிணக்காகும்.30 ஆண்டுகால யுத்தத்தில் இருந்து மீண்டெழுந்து கடலில் கால் பதிக்கும் ஈழமீனவர்களின் கால்களைத் தறிக்கும் செயலாகும்.
1) ஈழக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிக்கின்றார்கள்.
நெடுந்தீவு, பேசாலை வரை இந்திய விரிவாதிக்கத்தின் கடலாதிக்கம் ஈழ மீனவர்களை அச்சுறுத்துகின்றது.
2) இந்திய இழுவைப்படகுகளின் இரு பெரும் அழிவுகள்:
அ) ஏழை ஈழ மீனவர்களின் மீன்பிடி வலைகளை அவை அறுதெறிந்து சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றன.அதாவது `தொழில் போட்டியாளரை` இல்லாது ஒழிக்கின்றன.
ஆ)  சர்வதேச மீன் பிடிச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான இழுவைப் படகு மீன் பிடி முறை மீன் இன விருத்தியை அழிக்கின்றது.

 இழுவைப் படகு மீன் பிடி முறை

 இழுவைப் படகு மீன் பிடி முறையை ஒரு தொழில் முறை என்றவகையில் ஆராய வேண்டும்.``தமிழ் மீனவர்கள்`` என ஆராயக் கூடாது, ஆராய முடியாது.இந்த ஆராய்வில் இருந்துதான் இந்த தொழில் முறையில் இருந்து எழுந்துள்ள சமூக வர்க்கங்களையும் அவர்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் உள்ள உறவையும் இனங்காண முடியும்.இந்திய விரிவாதிக்கத்தின் ஈழக் கடலாதிக்கத்தை முறியடிக்க முடியும்.
----------------------------------------------------             புதிய ஈழப் புரட்சியாளர்கள்







No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...