01 ஜூன் 2014
இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகமும் இணைந்து இந்திய பிரதமராக புதிதாக பதவியேற்ற நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தும் இலங்கை மக்களுக்கு நல் அமைதி வேண்டியும் இலங்கை இந்திய நாடுகளிடையே பரஸ்பர உறவை மேம்படுத்த வேண்டியும் சிறப்பு பூஜை வழிபாடும் வாழ்த்து நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
அதற்கான நிகழ்வுகள் இந்து சமயப்பேரவை வளாகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. மேலும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் அவரது மக்கள் பணிக்கு ஆசி தெரிவித்தும் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இந்து சமயப் பேரவையின் வளாகம் வரை பேரணி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்
No comments:
Post a Comment