SHARE

Friday, February 07, 2014

அற்புதம் அம்மா: `அடைபட்ட கதவுகளின் முன்னால்’.

எனக்காக நீங்கள் அனைவரும் ஒரேயொரு புத்தகம் படிக்க வேண்டும்! 

குறைந்த பட்சம் ஒரு 5 பேருக்கு புத்தகத்தை (விலைக்கு ) வாங்கி படிக்க கொடுக்க வேண்டும்!!
கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலாவாகிய நான் இதுவரை ஃபேஸ்புக்கில் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக உதவி கேட்டதில் தொடங்கி பலரின் உயிர் காக்க ரத்தம் கேட்டது வரை முகம் தெரியாத யார் யாருக்காகவோ எல்லாம் உதவி கேட்டிருக்கிறேன். நண்பர்கள் பலரும் என் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்திருக்கிறீர்கள்.

ஆனால் முதல்முறையாக உங்களிடம் எனக்காக ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்..

நிச்சயமாக அது பண உதவி அல்ல.. எனக்காக நீங்கள் அனைவரும் ஒரேயொரு புத்தகம் படிக்க வேண்டும்..

அந்த புத்தகத்தின் பெயர் `அடைபட்ட கதவுகளின் முன்னால்’.

புத்தகக் காட்சியில் அற்புதம் அம்மாவிடம் கையெழுத்து வாங்கி வந்த புத்தகத்தை கடந்த வாரம் தான் ஒரு இரவு படிக்க ஆரம்பித்தேன். முடித்தபோது நெஞ்சடைத்துப் போய்விட்டது. அந்த அமைதியான நள்ளிரவில் என்னை மீறி அழ வேண்டும்போலிருந்தது.

23 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைபட்டிருக்கும் தன் மகனை மீட்க ஒரு அம்மா சிறைக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்த கதை அது.


படிக்க படிக்க இப்படியெல்லாம் ஒருவர் வாழ்வில் நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

அற்புதம் அம்மா ஒரு இடத்தில் சொல்கிறார்.. `` நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு முகத்திலும் நான் தங்கமான என் மகனின் முகத்தைக் காண்கிறேன்..”

எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்.

வேறு எந்த புத்தகத்திற்குமில்லாத பரிந்துரையை இதற்கு ஏன் செய்கிறேன் என்றால் மறுக்கப்பட்ட நீதி தூக்கு கயிற்றில் தொங்கவிட தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் உங்களிடம் எதிர்பார்பப்து கருணையோ உயிர் பிச்சையோ அல்ல..
நீதி கேட்கிறார்.

ஆனால் இந்திய கூட்டு மனசாட்சியோ எப்படியேனும் அவரை பலி கொடுக்க துடிக்கிறது.

தமிழில் எவ்வளவு அப்பாடக்கர் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தருக்கும் கூட ஒரு அம்மா ஜோல்னா பையும் ரப்பர் செருப்புமாக சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் 23 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் கதையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை..

ஆனால் மலையாளத்திலிருந்து தமிழகம் வந்த `மாத்யமம்’ என்ற பத்திரிகையின் நிருபர் அனுசிரி என்பவர் அந்த வரலாற்று பணியை செய்திருக்கிறார். (சகோதரி.. நீங்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் எங்கள் குலசாமிகளில் ஒருத்திம்மா நீ.. )

மலையாளத்தில் வெளியாகிய புத்தகத்தை தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்து பெரும் கடமையை செய்திருக்கிறார் யூமா வாசுகி.

இந்த புத்தகத்தை நீங்கள் ஒருவர் மட்டும் படிக்க வேண்டும் என்பதல்ல என் கோரிக்கை.. குறைந்த பட்சம் ஒரு 5 பேருக்கு புத்தகத்தை வாங்கி படிக்க கொடுங்கள்..

மகனை மீட்க போராடும் அற்புதமான அம்மாவின் நீதிக்கான பயணத்தில் நீங்களும் கை கோர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா
5-2-14
https://www.facebook.com/cartoonistbala
---------------------

புத்தகம் வாங்க தொடர்பு கொள்ளவும்:
Raghuvaran Ganesan, Karthi Keyan and Samuel Raja.

00919443058565/ 00919884021741
விலை : 60 ரூபாய்.

டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)


— with Raghuvaran Ganesan, Karthi Keyan and Samuel Raja.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...