Monday, 24 February 2014

எழு தமிழ் உயிர் காக்க, எழு தமிழ் உயிரே எழு!



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

2011 செப்ரெம்பர் 12 தியாகிகள் தின ஆர்ப்பாட்டத்தில் ம.ஜ.இ.கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் ஆற்றிய எழுவர் விடுதலை உரை.


மே 17 இயக்கம்.

தொடர்ச்சியாக 7 தமிழர்களை விடுதலை செய்ய,  இந்திய அரசு தடை செய்து வருகின்றது.பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடக் கோரும் நபர்கள், ஊடகங்கள், கட்சிகள் அதிகமாக குரலை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. மூவரையும் தூக்கிலிட்டுக் கொலை செய்யவேண்டுமென்கிற வெறியை ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

இவர்களை நாம் 
தடுத்தாக வேண்டும், 
எதிர்த்தாக வேண்டும், 
வென்றாக வேண்டும். 

இந்தப் போரில் தமிழர்கள் நாம் என்றும் தோற்கக் கூடாது. ஒருமுறை நாம் வலுவற்றவர்கள் என்று எதிரிக்கு உணர்த்திவிட்டோமென்றால், பின் ஒருபொழுதும் உலகம் நம்மை மதியாது. நாம் மேன்மேலும் மிதிக்கப்படுவோம், ஒடுக்கப்படுவோம். 

பெரும் திரளாக திரண்டு நின்று அடுத்த நீதிமன்ற அமர்விற்கு முன்பாக தமிழர்களின் ஆதரவினை திரட்டி காட்ட வேண்டும். மனித குலத்திற்கு எதிரான கும்பலுடன் நமக்கு நடக்கும் போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். 

வரும் மார்ச் 2, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு அற்புதம் அம்மாள் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யவும் மற்றும் நமது ”தோழர்களின் விடுதலையை உடனே செய்” எனக் கோரி சென்னை மெரினாவில் ஒன்று கூடுவோம். 

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்!


தமிழகத்தின் உரிமையில் தலையிடாதே!


ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி!

கைகோர்ப்போம். 
அற்புதம் அம்மாளின் கண்ணீரை துடைப்போம். 
வெல்வோம் விடுதலையை. 
தமிழரை தலை நிமிரச் செய்வோம். 
”இந்திய அரசின் துரோகத்தினை மறக்க மாட்டோம்” என்போம். 

துரோகங்களை வெல்ல, தலை நிமிர்வோம். 
மார்ச் 2இல் அச்சமின்றி கைகோர்ப்போம்.

Thirumurugan Gandhi: 


நாம் தமிழர் கட்சி














தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் பதிவு செய்த நாள் - பெப்ரவரி 20, 2014, 9:34:47 PM மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 20, 2014, 10:29:26 PM

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவிற்கு தடை பெற்ற சில மணி நேரங்களிலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், உச்சநீதிமன்றம் வழக்கின் அம்சங்களை கருத்தில் கொள்ள தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ரத்து செய்ததன் மூலம் நீதிமன்றம் அரசின் அதிகார வரம்பில் தலையிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து நபர் அமர்வு அளிக்க வேண்டிய தீர்ப்பை மூன்று நபர் அமர்வு அளித்துள்ளது சட்டவிரோதமானது என்றும் மத்திய அரசின் மறு சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
=================
Tamil Nadu government cannot take a unilateral decision

Legal experts are unanimous that the Tamil Nadu government cannot take a unilateral decision to order the release of seven convicts in the Rajiv Gandhi assassination case without the “effective consultation” of the Union government.

Eminent constitutional lawyer P.P. Rao said, “The case was investigated by the CBI under the Delhi Special Police Establishment Act, making consultation with the Centre mandatory.”

A top government law officer said the State would have to set up an advisory board to consider remission. There cannot be an automatic release.

Senior counsel K.T.S. Tulsi said the prisoners were entitled to be released “if their behaviour in jail has been good and there is nothing adverse”.
================
``Ms.Jeyalalithaa's announcement was seen by many analysts as a strategic move to shore up local pro-Tamil sentiment before elections for the lower house of Parliament.``New York Times

Indian State Says it Will Release 7 convicted in Assassination plot

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...