SHARE

Friday, August 02, 2013

மனோ கணேசன்: பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும்!

 
இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பதை இந்த இனவாதிகள் உணர வேண்டும்!
இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்!!
மனோ கணேசன்

அதிகாரப்பகிர்வு கணேசன்

கச்சதீவை விட்டுகொடுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு சதியாலோசனை - மனோ

கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து, அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு  13ம் திருத்தத்தை அடியோடு
அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெறுகிறது.

ஆனால் இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது.

ஆகவே இந்தியாவுடனான  ஒப்பந்தங்களை  கிழித்தாலும், ஒழித்தாலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்வது
என்பது இன்று இந்தியாவையும் தாண்டிய சர்வதேச பிரச்சினையாகி விட்டது என்பதை நான் அரசுக்கு உறுதியுடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கச்சதீவு தொடர்பாக இன்று இந்திய உயர் நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை படைகளின் தொல்லையில் இருந்து மீட்பதற்கு ஒரே வழி, கச்சதீவை மீட்பதுதான்
என்று தமிழகத்தில் இன்று கருத்து உருவாகி வருகின்றது. கச்சதீவை இந்திய மத்திய அரசு மீளப்பெறுமானால் அதை காரணமாக காட்டி, 1987ல் செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது. அதன்மூலம் 13ம் திருத்தத்துக்கு முழுமையாக முடிவு காணாலாம் என அரசுக்குள் உள்ள இனவாத பிரிவு
நினைக்கின்றது.

ஆனால், இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பது இந்த இனவாதிகள் உணர வேண்டும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட
ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்.

அதேபோல், இலங்கையில் மலையகத்திலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளையும், தமிழக மக்களின் அபிலாஷைகளையும் கணக்கில் எடுக்காமல், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களை
திருப்தி படுத்துவதற்காக தன்னிச்சையாக ஒப்பந்தங்களை செய்து வந்த தவறுகளை இந்திய மத்திய அரசு உணர வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நன்றி: யாழ் உதயன்

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...