Monday 16 December 2013

யுத்தகால மண் அணைகளை அகற்றுமாறு கோரிக்கை!



யுத்தகால மண் அணைகளை அகற்றுமாறு கோரிக்கை
திங்கட்கிழமை, 16 டிசெம்பர் 2013 16:19 Tamil Mirror
-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவலரண்களையும் அகற்றித் தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களில் யுத்த காலத்தில் போடப்பட்டிருந்த மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் ஆகியன இன்று வரையும் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை அகற்றப்படாமையினால் விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கைவிடப்பட்ட காவலரண்களில் வெடிபொருட்களின் அச்சம் காணப்படுவதால் அவற்றினை அப்பகுதி மக்கள் அகற்ற முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...