``சிறீதரன் எம்.பி`` க்கு நாவற்குழி அத்துமீறல் குடியேற்றக் காரர்கள் விடுத்த சவால்!
அதிகப்பெருவாக்கால் ``வெற்றி பெற்ற`` கூட்டமைப்புக்கு பொதுபல சேன விடுக்கும் சவால்!
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி!- பொதுபலசேனா எச்சரிக்கை
[ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 02:01.55 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ் வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறு. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயன்றால் அதற்கான பதிலடியை நாம் கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டை சீரழிக்கும் விடயத்தை யார் செய்தாலும் அதற்கு நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். கசினோ சூதாட்ட விடயத்தில் அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத்தில் வரலாற்று வெற்றியினைப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால்,தமது வெற்றியினை தவறாக பயன்படுத்துகின்றமையானது ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கில் ஆட்சியமைத்து மக்களுக்காக சேவையாற்றாது அவர்களின் சுயநலத்திற்காக மக்களை கொல்ல நினைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் சதித்திட்டமாகும்.
இதைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் தற்போது வடக்கில் வாழும் மக்களும் இறக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது சுய விருப்பிற்காக மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமே செயற்படுகின்றது.
இதில் வட மாகாணத்திற்கு ஒரு மாதிரியும் ஏனைய மாகாணங்களுக்கு வேறு மாதிரியும் சட்டத்தை பிரயோகித்தால் அது இறுதியில் சட்டச் சிக்கலினையும் பிரிவினையினையுமே ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில்,
வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தனி நாட்டுக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அதற்கான தகுந்த பதிலடியினை நாம் கொடுப்போம்.
கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகளும் வடக்கில் புலித்தீவிர வாதிகளும் ஒன்றிணைந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கொன்று குவிக்கவே திட்டம் தீட்டுகின்றனர். இதை நடைமுறைப்படுத்த விடக்கூடாது.
No comments:
Post a Comment