SHARE

Tuesday, October 15, 2013

`வெற்றி அல்லது வீரச்சாவு` உண்ணாவிரதத்தை கைவிட்டார் தோழர் தியாகு

`வெற்றி அல்லது வீரச்சாவு` உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு

உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு பதிவு செய்த நாள் - அக்டோபர் 15, 2013, 5:05:04 PM மாற்றம் செய்த நாள்- அக்டோபர் 15, 2013, 9:37:24 PM

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு முடித்து கொண்டுள்ளார்.
காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து முடிவு எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய் தமிழ் பள்ளி மாணவர்கள் பழரசம் கொடுத்து தியாகுவின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தியாகு கடந்த 15 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...