Monday 27 May 2013

சத்தீஸ்கர் மாநிலத்தில் இடது தீவிரவாத நக்சல்பாரிப் போராளிகளால் 27 காங்கிரஸ்காரர்கள் சுட்டுக் கொலை!

 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் மே 25-ஆம் தேதி, பிரசார ஊர்தியில் சென்ற காங்கிரஸ் கட்சியினர், 200 இற்கும் மேற்பட்ட இடது தீவிரவாத நக்சல்பாரிப் போராளிகளால் வழிமறிக்கப்பட்டு, 27 காங்கிரஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சதீஸ்கர் காங்கிரஸ் அமைப்பின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர்.

`Heavily armed Maoists ambushed a convoy of Congress leaders in Chhattisgarh’s Bastar district on Saturday, killing 27 people including State Congress Chief Nand Kumar Patel, senior leader Mahendra Karma and ex-MLA Uday Mudliyar besides leaving 36 others injured including former Union Minister VC Shukla.`

என இந்து பத்திரிகை தெரிவிக்கின்றது.

NDTV இல் மணிக்கணக்காகத் தொடரும் விவாதங்களில் தொலைக்காட்சி அறிவிப்பாள `நடிகைகளும், நடிகர்களும்` இக்``கோரக் கொலைக்கு`` காரணம் கண்டறிய முனைந்தனர்.காங்கிரஸ் பி.ஜே.பி மாநில நிர்வாகம் மீதும், பி.ஜே.பி மத்திய காங்கிரஸ் நிர்வாகம் மீதும் பரஸ்பரம் பழி தீர்த்துக் கொண்டன.

தலையிட்ட அறிவு ஜீவிகள் `மாவோயிஸ்டுக்களை` ஒழித்துக்கட்ட ஒரு பொது திசைவழியை உருவாக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

NGO மனிதாபிமானிகள் அரச படைகள் ஆதிவாசி மக்கள் மீது தொடுக்கும் தொடர்ந்த தாக்குதல்களையும், கனிமவளக் கொள்ளையையும் சுட்டிக்காட்டி கண்ணீர் வடித்தபடியே, இக்கோரக் கொலைக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைக் `காட்டுமிராண்டித்தனம்` எனக் கண்டித்து ஆசிரியர் தலையங்கம் தீட்டிய தினமணிப்பத்திரிகை ``சுரங்கப் பணிகள் தொடங்கப்படவில்லை என்ற காரணம் காட்டி உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க வயல்கள் பலவும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவை. பெரும் ""பணம் செலவழித்து'' பெற்ற உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இதற்கு இடைத்தரகர்களாக இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.`` எனக் கூறியுள்ளது.

மேலும் ``பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மாவோயிஸ்டுகள் உருவாகக் காரணம் என்று ஒருபுறம் வாதிடப்படுகிறது. இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. நிலக்கரிச் சுரங்கம், கனிமச் சுரங்கம் என்ற பெயரில் பழங்குடியினர் வெளியேற்றப்படுகின்றனர். வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இதை எதிர்க்கும் பழங்குடியினர் பலவந்தமாக அப்புறப்படுத்தப்படுவதும், இந்த எதிர்ப்பில் காவல்துறையுடனான மோதல்களும், இரு தரப்பு உயிரிழப்புகளும் தொடர்கின்றன.இது தீர்வு காணப்பட வேண்டிய விவகாரம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.`` என்றும் கூறியுள்ளது.

ஒரு மாநிலப் பிரிவின் மூத்த முக்கிய கட்சித் தலைமை நிர்மூலமாக்கப்பட்டதால்  நிலை குலைந்த சோனியா அம்மையார் ` இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் `` எனப் பிரகடனம் செய்து, பழி தீர்க்க ஆயிரக்கணக்கில் மத்திய அரசு படைகளை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைந்து அனுப்புகின்றார்.

அவரின் வலிபுரிகின்றது!

ஆனந்தபுரத்தில் ஈழத்தமிழரின் தலைமையை விசவாயு அடித்து பூண்டோடு ஒழித்தீர்களே எமது வலி புரிகிறதா?  அது காட்டுமிராண்டித்தனம் இல்லையா!

தினமணி ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது ``எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தை ஏற்காத தீவிரவாத அமைப்பை ஏற்றுக்கொள்ளாது.``

எந்தப்புரட்சிகர அமைப்பும் தனது அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டாத, எந்த ஒரு அதிகார பூர்வ அரசோடும் அடிமைச் சமரசம் செய்துகொள்ளக்கூடாது.

(சுபா) புதிய ஈழப்புரட்சியாளர்கள்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...