SHARE

Saturday, February 09, 2013

முஸ்லிம்களுக்கு எதிராக வறக்காபொலவில் சிஹல ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களுக்கு எதிராக வறக்காபொலவில் சிஹல ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம்
By Nirshan Ramanujam
2013-02-09 19:45:31

வறக்காபொல நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் சிஹல ராவய அமைப்பினர் இன்று பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் அவர்களுடைய உணவகங்களில் உணவு உண்ணுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதாக எமது வாசகர் ஒருவர் தெரிவித்தார்.

வறக்காபொலை நகரில் சுமார் 25 பிக்குமார் சகிதம் இருநூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

முஸ்லிம்களின் உணவகங்களில் உண்ண வேண்டாம், ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுகளை வாங்க வேண்டாம் உள்ளிட்ட தகவல் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகித்துள்ளனர்.
இத்தகவலை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்மாத் உறுதி செய்தது.

இது தொடர்பாக வறக்காபொல பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் தெரிவித்தனர்.

நன்றி: வீரகேசரி

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...