புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுப்பவர்கள் பயங்கரவாதிகள்: யாழ்.கட்டளைத் தளபதி
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 12:53.20 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுக்க அனுமதிக்க முடியாதுபோது அக்கொள்கையை முன்னெடுக்க விரும்புகிறவர்கள் பயங்கரவாதிகள் என்றே கருதப்படுவார்கள் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகளின் தலைவர் இறந்து விட்டார். நாட்டில் இனிமேல் அவர் சம்பந்தப்பட்ட எந்த விடங்களையும் மேற்கொள்ள முடியாது. அவரது கொள்கைகளை யாரும் முன்னெடுக்க முடியாது.
கடந்த காலத்தில் மிகவும் பயங்கரமான ஒரு பயங்கரவாதத்தோடு இராணுவத்தினராகிய நாம் சண்டையிட்டோம். இதற்காக பாரிய ஆயுதங்களையும் நாம் பாவித்தோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் ஒரு தனி நாட்டிற்காக போராடினார்கள். அவர்கள் இன்று அழிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் அவர்களின் சில எச்சங்களும், அவர்களுக்கு ஆதரவான சிலரும் இன்றும் தனிநாட்டிற்காகவே போராடுகின்றனர்.
இலங்கையில் இன்னொரு தனிநாட்டு உருவாவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. நாமும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

No comments:
Post a Comment