SHARE

Tuesday, January 29, 2013

சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்பட, யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத்தூதரகத்தை நிறுவ கத்தோலிக்க பெரிய பாதிரி பகிரங்க அழைப்பு!

சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்பட, யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத்தூதரகத்தை நிறுவ கத்தோலிக்க பெரிய பாதிரி பகிரங்க அழைப்பு!

இந்தியாவைப் போலவே அமெரிக்காவும், யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகத்தை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள், நேற்று யாழ். ஆயரைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட்டு வருகிறது. அதுபோலவே, அமெரிக்காவும் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, இங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்காணிக்கக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

இதன்மூலம், யாழ். குடியியல் சமூகத்துடனான தொடர்புகளை பேணி வரமுடியும்” என்று தாம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...