SHARE

Saturday, August 11, 2012

மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் டெல்றொக்சன்!!!


மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் டெல்றொக்சன்!!!

வவுனியா சிறைச்சாலையில் சிங்களச் சிப்பாய்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.

இறுதி வணக்க நிகழ்வில்  மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவ் வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற வாதிகள்,  இது திட்டமிடப்பட்ட கொலையே, உரிய நீதி கிடைக்க வேண்டும். என உரையாற்றினர். எனினும் திட்டமிட்டது யாரென்றோ, உரிய நீதி என்னவென்றோ அவர்கள் எதுவும் உரைக்கவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதித்தது.

அதன்பின்னர் சமய முறைப்படி பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி ஆராதனை நடத்திய பின்னர், கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் டெல்றொக்சனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

மோடி வருகை: அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு

மோடி ஏன் வருகின்றார்?