SHARE

Tuesday, July 17, 2012

ஆறுவயது ஈழ அகதிச்சிறுமி தமிழக அகதிமுகாமருகில் கோரக்கொலை - வீரகேசரி

ஆறுவயது அகதி ஈழச்சிறுமி தமிழக அகதி முகாமருகில் கொலை செய்யப்பட்டு  பாலத்தின் கீழ் வீசப்பட்டுள்ளதாக  வீரகேசரி, தமிழ் வின்,  மற்றும் பல தமிழ் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

தமிழக அகதி முகாமில் சிறுமிக்கு நடந்த கொடுமை     

7/17/2012 3:43:08 PM வீரகேசரி  

  தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த சிறுமி வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் பிரேதம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப்படுத்தப்பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39472

 ===========================

தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை: கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை
[ செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:07.27 PM GMT ] தமிழ் வின்

 தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழ் அகதி முகாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மேட்டுப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள்
முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப் படுத்தப் பட்டிருப்பதுடன்  உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmqyHSbOYjt6.html

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...