SHARE

Friday, October 26, 2012

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தெருமுனைக் கூட்டம்

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தெருமுனைக் கூட்டம்
தினமலர் – பு, 24 அக்., 2012
 
சிதம்பரம்:மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும். அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வு காண வேண்டும். சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் தெருமுனைக் கூட்டம் நடந்தது.
 
சிதம்பரம் பகுதி அமைப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் குணாளன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 
 

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...