SHARE

Wednesday, August 15, 2012

நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும்: ஜனாதிபதி

நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும்: ஜனாதிபதி

By General
2012-08-12 09:56:33

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே தீர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறு அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே ௭ட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்துத் தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம். – இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனநாயக ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் ௭ன்பதே ௭னது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு   அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை ௭ன சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 சதவீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். இந்தப் பிரசாரத்தில் உண்மையில்லை. 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த ௭ண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கிய உறவு பேணப் பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகா ரங்கள் தொடர்பில் இந்தியா ௭டுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் ௭டுக்கப்பட வேண்டும் ௭ன்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...