SHARE

Tuesday, July 24, 2012

நிமலரூபனின் இறுதிச் சடங்கில் பொதுமக்கள் பங்குகொள்ளத் தடை! வீட்டிலும்,சுற்றத்திலும் இராணுவக்காவல்!!


வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிமலரூபனின் திருவுடலுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி

[ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 07:18.19 AM GMT ]

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின், கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடலுக்கு த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது. இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட இருக்கின்றது.



இந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகர சபை உப தலைவர் எம். எம். ரதன், வலி. வடக்கு உப தவிசாளர் சஜீவன், பாண்டியன்குளம் உப தவிசாளர் எஸ்.செந்தூரன் கிளிநொச்சி, மாவட்ட கட்சி அமைப்பாளர் வேழமாலிகிதன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் ஆகியோரும் வணக்கம் செலுத்தினர்.

நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி பொலிஸார், படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நிமலரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் வணக்கம் செலுத்த முடியாத சூழலில் இறுதிச் சடங்கு  இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...