SHARE

Monday, April 09, 2012

இலங்கையரான புத்தர் திருக்கேதீஸ்வரத்தில் திடீரெனக் குடியமர்வு!

கேதீஸ்வரத்தில் வெண்கலப் புத்தர்; படையினர் அதிரடி; மக்கள் அதிர்ச்சி

மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான  கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்த பௌத்த வழிபாட்டுத் தலம் நிர்மாணிக் கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பீதியும் காணப்படுகிறது.

இந்தப் பகுதியில் பௌத்த மக்கள் எவரும் வசிக்காத நிலையில், தனியார் காணியை அபகரித்து பௌத்த தலம் அமைக்கப்பட்டுள்ளமை திருக்கேதீச்சரம் தனித்து இந்து மத வழிபாட்டிடமாக இருப்பதை மாசுபடுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்று பிரதேச இந்து, கிறிஸ்தவ மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஏதும் கைக்கொள்ளப்படாமல் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் சைவப் பெரியார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நன்றி யாழ் உதயன்
 

பிற்குறிப்பு:
1) இலங்கை இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு அல்ல, அது இலங்கையர்களைக் கொண்ட ஒரு தேசம் என சிங்களம் வாதிடுகின்றது.இதற்கமைய தமிழர்களின் வாழ்விடம் (தேசம்) என்று ஒன்று இல்லை, இலங்கையர்கள் இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்கிறது.அதிகாரப் பரவலாக்கத்தின் ஆதரவாளர்கள் சிங்களத்தின் இந்த வாதத்தை ஏற்கொள்கின்றார்கள்.ஆக இலங்கையரான புத்தர் திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக குடியமரலாம்!

2)1972,1978 அரசியல் யாப்பு பெளத்தமதத்தை அரசமதமாகப் பிரகடனப்படுத்தி அதைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்பை அரசின் கடமையாக்கியுள்ளது.இதனால் புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சாதாரண மதங்களுக்கு பொருந்தும் நடைமுறை அரச மதத்துக்குப் பொருந்தாது!

3) நல்லூரில் பக்சபாசிஸ்டுக்களுக்கு பாச தீபம் காட்டும் சைவப் பெரியார்களும், மடுத்தேவாலயப் பகுதியை திறந்துவிட்டு வடக்குப் படையெடுப்பின் வெற்றிக்கு வழியமைத்த  கிறிஸ்தவ பெரியார்களும், 1500 கிலோ வெண்கலப் புத்தரின் வருகைக்கு சிங்கள சேவை செய்தோரே ஆவர்!

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...