Monday, 30 January 2012

புதிய ஈழத்தில் போலிச் சுதந்திரம் பொசுங்கியே தீரும்!


புதிய ஈழம்

................. ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும்  மிக்க இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப, மேற்கண்ட புதிய ஜனநாயக அரசியல்,தேசிய ஜனநாயகப் பொருளாதாரப் பாதையே ஒரே வழியாகும். வேறெந்த வழியும் கிடையாது.மாறாக அந்நிய உலகமயமாக்கல்  பொருளாதாரக் கொள்கையிலும், அந்நிய நிதி மூலதனத்திலும் தங்கியிருக்கும் வரை, நாடு தனது அரைக்காலனிய சுதந்திரத்தையும் இழந்து முழு அடிமை நாடாகிவிடும். இன ஒடுக்குமுறை மேலும் கூர்மையடையும்.இத்தகைய ஒரு போக்கில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கும் சிங்களத்துடன் `அதிகாரத்தைப் பகிரும்` சீர்திருத்த வழியில் தனது சுதந்திரத்தை உறுதி செய்யமுடியாது.

ஒரு மக்கள் ஜனநாயக குடியரசால் இத்தகைய திட்டத்தை அதன் முதல் ஐந்தாண்டிலேயே  நிறைவேற்றிவிட முடியும்.ஆனால் 64 ஆண்டுகளாக இலங்கையின் ஆளும் கும்பல்கள் நாட்டை விதேசிய திட்டத்தில் வழி நடத்தி  வந்துள்ளனர். அதனால்த்தான் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இனப் பூசல் தொடர்கின்றது.இதற்குக் காரணம் தமிழர்கள் அல்ல.சிங்கள ஆளும்  கும்பல்களே ஆகும்.   ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் உள்ளவரை அதுவே இனியும் தொடரப்போகின்றது.

படியுங்கள்!                                                                                                         பரப்புங்கள்!!

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...