Tuesday, 29 November 2011

யாழ்-பல்கலைக்கழகத்தில் மாவீரர் தீபம்


                                                                    ஒயாது அலை

யாழ். பல்கலைக்கழக விடுதியில் ஏற்றப்பட்டது மாவீரர் நாள் சுடர் அல்ல என்கிறார் யாழ். தளபதி
[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 06:59.21 AM GMT ]

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரவோடிரவாக எவரோ பந்தம் கட்டி விளையாடியுள்ளனர்.

அதற்குப் பெயர் "மாவீரர் சுடர் அல்ல, தீப்பந்தமே'' என்று யாழ்.மாவட்ட இராணுவக் கடடளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பரபரப்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் ஆட்சி கவிழ்ந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. தற்பொழுது மத்திய அரசின் ஆட்சியே இங்குள்ளது. மறந்து செயற்படுபவர்கள் இதைத்தான் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர்த் தாங்கியின் உச்சியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மாணவர்கள் தயாராக நின்றமையையொட்டி அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழ். கட்டளைத்தளபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

"இல்லை....இல்லை.... நீங்கள் கூறுவது போன்று அதற்குப் பெயர் மாவீரர் சுடர் இல்லை, தீப்பந்தம்.  இரவோடிரவாக எவரோ பந்தம் கட்டி விளையாடியுள்ளனர். அதுவே இங்கு நடந்துள்ளது. வேறொன்றுமில்லை.

நீங்கள் கூறுவது போல யாழ்ப்பாணத்தில் எவரும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாகத் தகவல் இல்லை. இங்கு பிரபாகரனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றனவே. அரசின்

ஆட்சிதான் இங்குள்ளது என்பதை சிலர் மறந்து செயற்படுகின்றனர்'' என்றார் ஹத்துருசிங்க.

No comments:

Post a Comment